2025 மே 22, வியாழக்கிழமை

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

S.Renuka   / 2025 மார்ச் 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த நாட்களுக்குப் பதிலாக ஏனைய நாட்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற இந்த கண்காட்சி, 16 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன், கண்காட்சியின் ஆரம்ப தினம் பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரையிலும், ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 5.30 வரையிலும் புத்தரின் புனித தந்ததாது பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X