2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

கத்தோலிக்கர்களிடம் பேராயர் கோரிக்கை

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சீரற்ற வானிலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புற்ற நிலையில், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாடவதை கத்தோலிக்கர்கள் தவிர்க்க வேண்டுமென பேராயர் மெல்கம் ரன்ஜித் கருதினால் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் தமது குடியிருப்புகளை இழந்துள்ளதுடன், தமது அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளனர்.  இவ்வாறான சூழலில் ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண் செலவுகளுடன் கூடிய கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கத்தோலிக்க சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையில் எளிமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். அவரது பிறப்பு மிகவும் எளிமையானது.

இதனால் அவரின் பிறப்பை வரவேற்கத் தயாராகும் கிறிஸ்தவர்களும் எளிமையுடன் அதனை கொண்டாடுவது சிறந்தது என்றும்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X