Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 01 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி வழங்க 12புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு...
ழூகதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. செயல்படும் நேரத்திலும் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.
1) சிசிரிவி கண்காணிப்பு கெமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
2)அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.
3)வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.
4)எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.
5)நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.
6)பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.
7)காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள்.
7)ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.
8)ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
9)உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.
10)விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .