Niroshini / 2021 மே 28 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீப்பற்றியெறிந்த எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலிலிருந்து, நாட்டின் கடல் வளம், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுறுதலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதற்காக இக்கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தீப்பற்றி எரிந்த இந்தக் கப்பலில் இருந்த இரசாயனப் பொருள்கள் உள்ளிட்டப் பொருள்கள் பாணந்துறை, புத்தளம், நீர்கொழும்பு ஆகியக் கடற்கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன என்றார்.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், கரையொதுங்கும், கடலில் விழுந்துள்ள இரசாயனப் பொருள்களை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதனால், நாட்டின் கடல் வளம், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, காற்று மாசுறுதலும் ஏற்பட்டுள்ளமைத் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், இக்கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago