Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம், அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் கம்பனி பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே, நேற்று (17) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கம்பனி பதிவாளர் திணைக்களம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவருவதாகவும், மோசடிகள் இடம்பெறுவதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துவருவதால் உயர்மட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி, முறைகேடுகள் இடம்பெறாது பாதுகாக்குமாறு, இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், அவற்றை காலத்துக்குப் பொருத்தமான முறையில் மாற்றுவது தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
37 minute ago
46 minute ago