Editorial / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் 2 நாட்களில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31 ஆம் திகதி சென்னையில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு நடத்தினார். இந்த மீட்டிங்கில் பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளில், பாமகவிற்கு 23 தொகுதிகள், தினகரன் திரும்பி வந்தால் அமமுகவிற்கு 3 தொகுதிகள் வழங்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் கூட்டணி சமூகமாக இருக்கும் வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் டிடிவி தினகரன் இதை மறுத்துள்ளார். தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்களை தவிர்த்து விட்டு யாரும் வெற்றி பெற முடியாத நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக வட்டணியில் அமமுகவுக்கு 6 சீட்கள் ஒதுக்கீடு என்பது வதந்தி. ஊடகங்கள் செய்தியின் உண்மைதன்மை தெரியாமல் வெளியிடக் கூடாது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு நாங்கள் தான் கல்யாணம் செய்வோம், என்று கூறி உள்ளார்.
27 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
1 hours ago