2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சிக்கினார்

Thipaan   / 2016 மார்ச் 08 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து, கர்ப்பிணியொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் திங்கட்;கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைக்குண்டொன்றைத் தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி நபர், ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, மேற்படி கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் தொடர்புபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளத.

26 வயதுடைய மேற்படி சந்தேகநபரிடமிருந்து, ஐந்து அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறிய பொலிஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X