2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் கெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன் துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 8460 மில்லி கிராம் கெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரையும் சான்று பொருளையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .