2026 மே 09, சனிக்கிழமை

கராபிட்டிய கொரோனா வாட் நிரம்பியது

Nirosh   / 2021 மே 02 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு (01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.

இதனால் அந்த வைத்தியசாலையின் மேலும் இரு வாட்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கே.எச்.ஜி.ஜிவரதன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 36ஆம் இலக்க வாட்டில் 55 தொற்றாளர்கள் காணப்பட்ட நிலையில், இதனைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக 46, 25ஆம் இலக்க வாட்கள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக அக்மிமன மெலிபன் வைத்தியசாலையும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .