Freelancer / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தப்பத்து இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாறுபாடு பரவுவதால், தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முடியுமானால், கர்ப்பத்தை 1 வருடம் தாமதப்படுத்துங்கள் என்றும்கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள் மற்றும் பிறப்பில் கொரோனா தொற்றுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சமீபத்தில் இரண்டாவது மற்றும் எப்போதாவது முதல் மூன்று மாதங்களில் மிகவும் தீவிரமான தொற்றுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago