Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கேதீஸ்வரம் கோவில் வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக, அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில் மன்னார் மாவட்ட செயலாளரினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில், நடைபெறவிருந்த இந்தக் கலந்துரையாடலில், இரு தரப்பு மத தலைவர்கள், கோவில் பிரதிநிதிகள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச சபை தலைவர் உட்பட அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக, மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ, வெளிநாடு சென்றுள்ள காரணத்தால், நடைபெற இருந்த கலந்துரையாடலை பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைக்கும்படி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், அமைச்சர் மனோ கணேசனிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மனோ, நடைபெற இருந்த கலந்துரையாடலை ஒத்தி வைத்துள்ளார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago