2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்த போது தடைகள் ஏற்படுத்தப்பட்டன’

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வாறான தடைகள் வந்தாலும் வேகமாக மாறிவரும் நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில், கல்வி கட்டமைப்பை மாற்றி மக்களுக்கு இதன் இலாபங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக,  கடந்த தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது, அங்கிருந்த சிலர் இவற்றைத் தடுப்பதற்கு திட்டமிட்டதால் அவற்றை செயற்படுத்த முடியாமல் போனதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக முன்​வைக்கப்பட்ட திட்டங்களும் உரிய முறையில் முன்னெடுப்பதற்கு குறித்த நபர்கள் தடையை ஏற்படுத்தியதாகவும், இதனால் எதிர்பார்த்த அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வித தடைகள் ஏற்படுத்தப்படினும் கல்வித் துறையில் மாற்றங்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .