2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படும்

Freelancer   / 2025 நவம்பர் 28 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் இந்த பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடமும், அப்பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X