Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
களுத்துறை பிரதேச சபையின் கீழ் உள்ள, அரச நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, கட்டடம் ஒன்றின் மேல் மாடியில், ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்துள்ள, விபசார விடுதி ஒன்றை, களுத்துறை வடக்கு பொலிஸார், நேற்று (15) மாலை, சுற்றிவளைத்துள்ளதுடன் அதன் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், 20-30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், தொடங்கொடை, பதுரலிய, தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நிலையமானது, மிக நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளதுடன், நபரொருவர் வழங்கிய இரகசியத் தகவலுக்கமைய, பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் இங்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனரென, தமக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago