2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை இனிக்க இனிக்க

Editorial   / 2025 ஜூன் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாரும் அளிக்காத இன்ப விருந்தை கள்ளக்காதலன் எனக்கு அளித்தார் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

சரி இனி கதைக்கு வருவோம்.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் நில சர்வேயராக வேலை செய்து வந்தார்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்தவர்  ஐஸ்வர்யா. இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் திகதி  திருமண நிச்சியதார்த்தம் நடந்தது.திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். கண்ணூரில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக உள்ள ஒருவரை காதலித்ததால் அவருடன் சென்று விட்டதாக கருதினர்.இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டனர்

இதனை அறிந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டிற்கு வந்தார். ஐஸ்வர்யா தனது வருங்கால கணவருக்கு போன் செய்து நான் யாரையும் காதலிக்கவில்லை வரதட்சணை கொடுக்க தனது தாய் சிரமப்படுவதை தாங்க முடியாமல் தனதுதோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன். நான் உங்களைதான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று நீலக்கண்ணீர் வடித்தார். மேலும் உங்களை தவிர நான் வேறுயாரையும் நேசிக்கவில்லை என்று கண்ணீர் மல்க மேலும் ஐஸ்வர்யாவின் பேச்சில் மயங்கிய தேஜஸ்வர் உண்மை என்று நம்பி தனது குடும்பத்தினரை சமாதானம் செய்தார்.

 

இதனையடுத்து தேஜஸ்வருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 17-ம் திகதி  திருமணம் நடந்தது. திருமணவாழ்க்கையில் பலகனவுகளோடு காத்திருந்த தேஜஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா கள்ளக்காதலனுடன் மணிக்கணக்கில் பேசிவந்துள்ளார். தேஜஸ்வர், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்யும்போதெல்லாம் பிசி..பிசி என்று வந்துள்ளது. வீட்டிற்கு வந்த தேஜஸ்வர் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மழுப்பலாக பதில் கூறியுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தேஜஸ்வர் குடும்பத்தினருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தேஜஸ்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.

 

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யாவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்து வீசியது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில்,

எனது தாய் கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். அப்போது வங்கியில் கேஷியராக வேலை செய்து வந்த ஒருவருடன் எனக்கு கள்ளக்தொடர்பு ஏற்பட்டது. அவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால் அவருடன் மேலும் பழக்கம் அதிகரித்தது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்தநிலையில், தேஜஸ்வருடன் எனக்கு திருமணம் நடந்த பிறகும் கள்ளக்காதலனுடன் நான் அடிக்கடி பேசி வந்தேன். தேஜஸ்வர் ஊரில் இல்லாதபோது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பது வழக்கம். மேலும் யாரும் அளிக்காத இன்ப விருந்தை கள்ளக்காதலன் எனக்கு அளித்தார்.

கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவைக்கு மேல் செல்போனில் இனிக்க இனிக்க பேசினேன். விவரம் அறிந்து, எங்கள் விவகாரம் தேஜஸ்வருக்கு தெரியவந்ததால் என்னை கடுமையாக கண்டித்தார். எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். இது குறித்து கள்ளக்காதலனிடம் தெரிவித்தபோது அவர் தேஜஸ்வரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து காரை அனுப்பி வைத்தார்.

காரில் வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என கூறி தேஜஸ்வரை காரில் அழைத்து சென்றனர். காரில் செல்லும் வழியில் கூலிப்படையினர் திடீரென கத்தியை எடுத்து தேஜஸ்வரின் கழுத்தை அறுத்தனர். மேலும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தேஜஸ்வர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தேஜஸ்வரின் உடலை ஆந்திர மாநிலம் பன்யம் அடுத்த சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் தேஜஸ்வர் உடலை மீட்டனர். கொலைக்கு ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவும் உதவி செய்ததாக தெரிவித்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சுஜாதா மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வங்கி கேஷியரை தேடி வருகின்றனர். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .