2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கழிவுநீர் குழாய் ஊடாக தொடர்மாடிக்குள் நுழைந்தவர் சிக்கினார்

Princiya Dixci   / 2016 ஜூன் 11 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் 6ஆவது மாடிக்கு, கழிவுநீர் குழாய் ஊடாக நுழைந்து, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 250,000 ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிய நபரைக் கைதுசெய்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொஹுவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடம்பர வீடு, நவீன மின்சாரப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் ஆடம்பர வான் ஆகியவற்றின் உரிமையாளர் எனவும் வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகள் பலவற்றில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் சந்தேகநபர் விடுதலையாகியுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

31 வயதையுடைய இச்சந்தேகநபர், மூன்று பிள்ளைகளின் தந்தையென்பதுடன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியுள்ளதாகத் தெரிவித்த வெள்ளவத்தைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகளை அடகு வைத்த குற்றச்சாட்டின் பேரில் அவரது மனைவியையும் வெள்ளவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .