Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 25 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
"எந்த தண்டனையை தருவதாக இருந்தாலும், அதை தீர்ப்பாக எழுதும்போது, நாம் சரியாகத்தான் தண்டனை தருகிறோமா? என்ற லேசான அக்கறையும் இருக்கும்.. ஆனால், கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமில்லாத அளவுக்கு சாட்சியங்களுடைய அடிப்படையில், இப்படித்தான் தீர்ப்பு தர வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.. இதற்கு அசாத்தியமான மன உறுதி வேண்டும்" என்று அபிராமிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் சுமதி, கருத்து தெரிவித்துள்ளார்.
"அபிராமியின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று சொல்ல, இது கொண்டாடக்கூடிய விஷயமில்லை.. ஆனால், இந்த தீர்ப்பு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. என மூத்த வழக்கறிஞர் சுமதி, Vikatan யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.
சமூகத்துக்கென ஒரு ஒழுக்கம் உள்ளது.. அந்த கட்டுப்பாட்டை மீறி, ஒருவரை கொன்றுவிட்டு, தான் மட்டுமே இன்பமாக இருக்கலாம் என்ற நியதியை ஏற்க முடியாது..
முதலில் இது பெரியவர்களுக்கான பிரச்சனை.. அபிராமிக்கு இன்னொரு நபரை பிடித்திருக்கிறது என்றால், அதுவும் யோசிக்கக்கூடிய விஷயம்தான்.. ஆனால், அப்போதும்கூட, அது தம்பதிகளுக்கான பிரச்சனை மட்டுமே..
சம்மந்தமில்லாமல் 2 குழந்தைகளையும் கொல்வது ஏற்க முடியாதது. குற்றத்துக்கு பால் பேதம் கிடையாது என்பதை முதன்முதலில் அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் மக்கள் மனதில் பதிய செய்தது, இந்த அபிராமி வழக்குதான்.
நீதிபதியின் மனநிலை
தீர்ப்பின்போது அபிராமி அழுதுள்ளார்.. பொதுவாக, நீதிபதியின் மனநிலை, மிகவும் கடினமான இடம்.. வெளியிலிருந்து பார்த்து, அவரது பணி எளிதானது என்று சொல்லிவிடுகிறோம்.. ஆனால், அது அவ்வளவு சாதாரணமானது இல்லை..
எந்த தண்டனையை தருவதாக இருந்தாலும், அதை தீர்ப்பாக எழுதும்போது, நாம் சரியாகத்தான் தண்டனை தருகிறோமா? என்ற லேசான அக்கறையும் இருக்கும்.. ஆனால், கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமில்லாத அளவுக்கு சாட்சியங்களுடைய அடிப்படையில், இப்படித்தான் தீர்ப்பு தர வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.. இதற்கு அசாத்தியமான மன உறுதி வேண்டும்.
கண்ணீர் விட்ட அபிராமி
கருணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு அபிராமி கேட்கிறார்.. ஆனால், இந்த உலகத்தில் கருணை என்ற வார்த்தையை கூட சொல்ல தகுதியில்லாதவர் அபிராமிதான்..
அபிராமியின் கணவர் தனியார் வங்கியில் வேலை பார்த்துள்ளார். வீட்டிலிருந்த அபிராமி டிக்டாக்கில் புகழ் பெற்றுவிட்டார்.. ஆனால், எப்பேர்ப்பட்ட துறையாக இருந்தாலும், ஒருவரின் வெற்றி இதயத்துடன் நின்றுவிட வேண்டும்.. அது மண்டைக்குள் ஏறிவிடக்கூடாது.. அப்படி ஏறிவிட்டால், அது வீழ்ச்சிக்கு அடிகோலிவிடும்.
அபிராமி - மிஸ்ஸிங்
சோஷியல் மீடியா ஒரு காரணம் என்றாலும், அதுவே முற்றிலும் காரணம் கிடையாது.. ரீல்ஸ் போடுபவர்கள் எல்லாருமே இப்படி செய்வதில்லையே?
ஆடியோ கேட்டேன்
அபிராமி: 5, 5, மாத்திரை தந்தேன்.. ஆனால், தூங்கிட்டு இருக்கிற மாதிரி தான் இருக்கு
சுந்தரம்: செத்துட்டாங்களா?
அபிராமி: தூங்கற மாதிரிதான் இருக்கு.. ஆனால் என்ன நடக்குதுன்னே தெரியலயே
சுந்தரம்: என்ன நீ, இவ்ளோ தைரியமே இருக்கே, பதட்டமே இல்லாமல் இருக்கே? எனக்கே பயமா இருக்கு....
இப்படி இருவரும் பேசிக் கொண்டார்கள்.. செத்துட்டாங்களான்னு ஒரு கேள்வியை, எந்த தாயால எதிர்கொள்ள கொள்ள முடியும்? ஆனால், பதட்டமேயில்லாமல் பேசினார் அபிராமி.. இப்படியொரு கிரிமினல் பெண்ணுக்கு, இந்த தண்டனை தரப்படாவிட்டால், வேறு எந்த கிரிமினலுக்கு இப்படியொரு தண்டனையை தர முடியும்? என்றெல்லாம் பேசியிருக்கிறார் வழக்கறிஞர் சுமதி.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago