Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள, கழிவுகள் நிறைந்த கொள்கலன்கள் உள்ளிட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்படாத, 1000 கொள்கலன்கள் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரசாயன பகுப்பாய்வாளருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், நாளை வரை வைத்திருப்பதற்கு, நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர், இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அத்துடன் கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் கொள்கலன்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்கும் சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago