2026 மே 18, திங்கட்கிழமை

dd

குவாரியில் மூழ்கி இரு தொழிலாளர்கள் பலி

Editorial   / 2026 மே 18 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

  கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிகம பகுதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் நீராடச் சென்ற இரு தொழிலாளர்கள், நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகக் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த தர்மசாமி ஸ்ரீ கண்ணன் (39) மற்றும் தர்மசாமி பிரபாகரன் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக, ஹப்புத்தளை பகுதியிலிருந்து வருகை தந்திருந்த ஐந்து தொழிலாளர்கள், தாங்கள் தங்கியிருந்த தங்குமிடத்திற்கு அருகில் உள்ள கல் குவாரிக்கு நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று இந்த ஐந்து நபர்களும் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் மூவர் மாத்திரம் தங்குமிடத்திற்குத் திரும்பியுள்ளனர். எனினும், ஏனைய இரு தொழிலாளர்களும் நீண்ட நேரமாகியும் தங்குமிடத்திற்குத் திரும்பாததால் சந்தேகமடைந்து தேடிப் பார்த்தபோது, அவர்கள் இருவரும் கல் குவாரி நீரில் மூழ்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X