2026 மார்ச் 16, திங்கட்கிழமை

’குஷ்’ மற்றும் மருந்துகளுடன் இருவர் கைது (வீடியோ)

Janu   / 2026 மார்ச் 16 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒரு கோடியே 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான "குஷ்" (Kush) போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான அழகுசாதன மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இணைந்து திங்கட்கிழமை (16) அதிகாலை முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டனர்.

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து அதிகாலை 12:20 மணியளவில் 'எயார் ஏசியா' (FD-140) விமானம் மூலம் வந்திறங்கிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் அதில் ஒருவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் மற்றையவர் மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  குஷ் போதைப்பொருள்  01 கிலோ 632 கிராம் கொலாஜன் பாக்கெட்டுகள்  2,160 அலகுகள் விட்டமின் சி மாத்திரைகள் 6,390 அலகுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இவ்வாறான கொலாஜன் மற்றும் விட்டமின் சி மாத்திரைகளை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் (NMRA) விசேட அனுமதி அவசியமாகும். எவ்வித அனுமதியுமின்றி இவை கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் இருவரும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு  பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X