2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘காணாத அறிக்கைக்காக இரத்தத்தை சிந்துவதா’

A.Kanagaraj   / 2018 ஜனவரி 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை  மறைப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஒத்துழைக்காது. காணாத  அறிக்கைக்காக, சண்டை போட்டு இரத்தம் சிந்துவது நகைப்புக்குரியதாகும்”  என்று, அக்கட்சி தெரிவித்துள்ளது. 

சட்ட ஆலோசனையைப் பெற்று முறையாக வழங்குவதற்காகவே, 17ஆம் திகதி வரை கால அவகாசம் பெறப்பட்டதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பில்,  நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சுதந்திரக் கட்சி, ஊடகவியலாளர் சந்திப்பை  நேற்று நடத்தியது. 

அந்த சந்திப்பில், அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் லசந்த  அழகியவண்ண, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

சரத் அமுனுகம 

“பிணை முறி அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பிய  கடிதம் 9 ஆம்திகதி பிற்பகல் 4.00 மணிக்குத் தான் ஜனாதிபதிக்குக் கிடைத்தது.  இதன் பிரதி ஜனாதிபதியினால் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.  பரிந்துரைகளுக்கமைய அவர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை  எடுப்பார்.

“இலங்கை வரலாற்றில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவை  பாவனைக்குதவாத பொருட்கள் இடும் பெட்டியில் வீசப்பட்டுள்ளன. ஆனால் ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன விசாரணை நடத்த ஆணைக்குழு நியமித்து அதனை நாட்டுக்கும்  பகிரங்கப்படுத்தியுள்ளார். பிணைமுறி அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு  கோரி கடிதம் கிடைத்து 24 மணி நேரத்தில் ஜனாதிபதியால் செயற்பட முடியாது.  சட்ட ஆலோசனை பெற்று உரிய வகையிலே அதனை வழங்க வேண்டும்.

“இன்றைய சர்ச்சையினால் நாடாளுமன்றம் கேலிக்கிடமானது” என்றார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால

சபாநாயகர், பிணைமுறி அறிக்கையை கோரி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம்  அனுப்பிய நிலையில் ஜனாதிபதி செயலாளர் அது தொடர்பில் சட்டமா அதிபரின்  ஆலோசனையை பெற்றுள்ளார். அறிக்கையுடன் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு அவற்றை  வழங்குமாறு சட்டமா அதிபர் கூறியுள்ளார் என்றார்.

பிரதி அமைச்சர் லசந்த 

“சரத் பொன்சேகவுக்கு எதிரான விசாரணை குறைந்த காலத்தில் பூர்த்தி  செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.இதற்குப் பங்களித்தமை தொடர்பில்  வருத்தமடைகிறோம்.

“தகவலறியும் சட்டத்தின் கீழ் பிணை முறி அறிக்கையின் பிரதியை சிலர்  கோரியுள்ளார்கள். இதிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதோடு அதனை சபையில்  சமர்ப்பித்து விவாதம் நடத்தவும் வேண்டும்.இந்த நடவடிக்கைகள் முறையாக நடைபெற  வேண்டும். அதனால் தான் ஜனாதிபதி கால அவகாசம் பெற்றுள்ளார். அறிக்கையை  மறைக்கவோ மக்களுக்குச் செல்வதை தடுக்கவோ சுதந்திரக் கட்சி முயலாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X