2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காணாமல்போன துப்பாக்கி,தோட்டாக்கள் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாயிடமிருந்து,  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருடிச் செல்லப்பட்ட, ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன, ஹோக்கந்தர பகுதியில் வைத்து, பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு தடுப்பு பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி, க​டமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு,  அவரிடமிருந்த, டீ 56 ரக துப்பாக்கி அபகரிக்கப்பட்டது. சம்பவத்துடன்  தொடர்புடைய  இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஒருவர், தனது உறவுக்காரரான இராணுவ சிப்பாய் ஒருவருக்கு  குறித்த துப்பாக்கியை வழங்கியுள்ளார். இந்நிலையில், குறித்த   இராணுவ சிப்பாய் அதனை, இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற நபரொருவருக்கு, 2 இலட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்துள்ளார் என, தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், இராணுவ சிப்பாய் மற்றும் அதனை துப்பாக்கியை விலைக்கு வாங்கிய  முன்னாள் இராணுவ சிப்பாய் ஆகியோர் நேற்று (08), கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்க​ள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .