Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சுழிபுரத்தில் கடற்றொழில் அமைச்சர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை மீனவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
செவ்வாய்க்கிழமை (09) அன்று சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும் கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தருவதாகவும் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் 10 மணியிலிருந்து 12:30 மணி வரை காத்திருந்துள்ளதுடன் மாலை 2: 00 மணியளவில் தாம் வருகை தரமாட்டோம் என தெரிவித்த நிலையில் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை சுழிபுரம் சவுக்கடி மீனவர்களையும் கடற்கரைக்கு வருகை தருமாறு கோரிய நிலையிலும் அமைச்சர் வருகை தராமையால் கடற்றொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வயது முதிர்ந்த சில முதியவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சென்றிருந்தனர் .
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வியலை நடாத்தி வரும் மீனவர்கள் மக்கள் பிரதிநிதி ஒருவருக்காக நீண்ட நேரம் காத்திருந்து தேர்தல் காலத்தில் கூட திரும்பியுள்ளனர். இதேவேளை அரச துறைசார் கடற்றொழில் பரிசோதகரும் காலை முதல் தனது ஏனைய வேலைகளை விடுத்து அமைச்சரின் வருகைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலாவது பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக செயற்பாடுவார்களா எனவும் தேர்தல் காலங்களிலேயே வருகிறதாக கூறி விட்டு வருகை தராத அமைச்சர் எதிர்காலங்களிலாவது எவ்வாறு வருகை தருவார் என்பதில் என்ன நிச்சயம் இருக்கின்றது என பிரதேசத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago