Editorial / 2026 மார்ச் 08 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நவீன ரக "காஸ் குக்கர்" விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 32 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த தம்பதி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகநூலில் பதிவிடப்பட்டிருந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்த யாழ். நபர், அதில் குறிப்பிடப்பட்டிருந்த வட்ஸ்அப் இலக்கம் ஊடாக விற்பனையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். இதன்போது, குறித்த காஸ் குக்கரைத் தமக்கு அனுப்புமாறு அவர் கோரியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த மோசடியாளர்கள், தமது வங்கிக் கணக்கிற்கு காஸ் குக்கரின் விலையான 32,000 ரூபாயை வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பிய பாதிக்கப்பட்ட நபர், பணத்தை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டையும் வட்ஸ்அப் ஊடாக அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
பணம் கிடைத்ததும் "இரண்டு நாட்களில் அனுப்பி வைக்கிறோம்" எனக் கூறி காலம் கடத்திய மோசடியாளர்கள், பின்னர் "அனுப்பி வைத்துவிட்டோம்" எனப் பொய் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது, திடீரென அந்த வட்ஸ்அப் கணக்கை முடக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த நபர், மோசடியாளர்களின் முகநூல் பக்கத்திலிருந்த தம்பதியினரின் புகைப்படத்தை ஆராய்ந்தபோது, அது ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தனது பக்கத்தில் பதிவேற்றியிருந்த வேறொரு தம்பதியினரின் புகைப்படம் என்பது தெரியவந்தது.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர், தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆன்லைன் ஊடாக பொருட்களை வாங்கும்போது முன்பணம் செலுத்துவதில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
32 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago