2025 மே 21, புதன்கிழமை

கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Simrith   / 2025 மார்ச் 11 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களை கடுவெல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடுவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, அந்தத் துப்பாக்கியின் 143 தோட்டாக்கள், ஒரு ரிவோல்வர் மற்றும் 09 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

45 அடி கிணற்றிற்குள் பொலித்தீன் பையில் மூடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன, அதே நேரத்தில் சந்தேக நபர்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X