Kogilavani / 2021 ஜனவரி 01 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
கிராம மட்டத்திலிருந்து கட்சியை சீரமைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒற்றுமையாகச் செயற்படுவதால், மாற்றுக் கட்சியின் தேவையை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களுக்கான கூட்டம், இரத்தினபுரி மவுண்ட் கப் சுற்றுலா விடுதியில், இன்று (1) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
'நாடாளுமன்றனத்தில் ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டாலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்றாக ஒற்றுமயாகவே செயற்படுகின்றனர். மிகக் குறுகிய காலத்துக்குள் மக்கள் இதனை உணர்ந்துகொண்டுள்ளனர்.
'எனவே இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றீடாக ஒரு கட்சியை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஐ.தே.கட்சியின் தேவைக்குறித்து உணர்கின்றனர். அதனால், ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியை மறுசீரமைப்பதற்கு முன்பாக, கட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
'எமது கட்சியின் தீர்மானத்துக்கு அமைய, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கவுள்ளோம். எனினும் அவர் அதனை ஏற்க மறுத்து வருகின்றார். இது குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடி இம்மாதம் முடிவதற்குள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவுள்ளோம்' என்றார்.
'எமது கட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சபைகளிலும் ஒலிக்க வேண்டும். அத்துடன் எமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் அதற்காக அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவோம்' என்றார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago