Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2017 ஜூன் 08 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராம சேவையாளர் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்த போதும், கிராம சேவையாளர்களின் சங்கங்கள் 50 சதவீதம் ஆண்களையும் 50 சதவீதம் பெண்களையும் நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
எனினும், தொழிற்சங்களின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இதனாலேயே, பெறுபேறுகளை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம், நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார்.
நாட்டில் திடீரென ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக, வெற்றிடமாகவிருந்த கிராம சேவையாளர் பதவிகளுக்கு, ஓய்வுப்பெற்ற கிராமசேவையாளர்களை இணைத்துக்கொண்டதாகவும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டவுடன் இவர்களுடைய நியமனங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நியமனங்களில் அரசியல் எதுவும் கிடையாது. அவசர தேவையின் அடிப்படையிலேயே இவர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்போது, குறுக்கிட்ட அநுர குமார எம்.பி, “பெற்றவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றறிக்கை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும், அனர்த்தம் ஏற்பட்டது தற்போதுதான்.
“அனர்த்தத்தை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் ஞானம் உங்களுக்கு உள்ளது. அனர்த்தத்தை அறிந்துகொள்ளும் இயந்திரம் உங்கள் தலையில் உள்ளது போல, அப்படியென்றால் நீங்கள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பதவியைவிட, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பதவிக்குதான் தகுதியானவர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .