Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதியமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டீன் லெகாட்டை இன்று (16) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வைத்துச் சந்தித்துள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாஷிங்டன் நோக்கி பயணமாகியிருந்த நிலையிலேயே, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டீன் லெகாட்டை சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் கடந்த 11ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணமாகியிருந்தனர்.
அத்துடன் சர்வதேச நாயண நிதியத்தால் வழங்கப்படும் 1.5 பில்லியன் ரூபாயான 6ஆவது தவணைக் கடன் இதுவரை வழங்கப்படாமைக் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago