Editorial / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது செவ்வாய்க்கிழமை (21) மாலை மோதியுள்ளது.
இந்த விபத்தில் தர்மராசா என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாரதி விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago