2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள்,  சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில், நிந்தவூரில் நாளை மறுதினம் (19) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளன.

திருகோணமலை, மீறாவோடை, நிந்தவூர், இறக்காமம், அம்பாறை, மட்டக்களப்பு, பாணம, ஏறாவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கே இவை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, ஏனைய மாகாணங்களுக்கான அம்பியூலன்ஸ்கள், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரின் தலைமையில், கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து நாளை (18) பிற்பகல் 2 மணிக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்துக்குள் மேலும் பல வைத்தியசாலைகளில் காணப்படும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .