2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குடிவரவு-குடியகல்வு பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு-குடியகல்வு பணிகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குடிவரவு- குடியகல்வு மற்றும் சுங்க கட்டுபாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிநடத்த விமான நிலையத்தில் பல்வேறு நிலையங்களை அமைப்பதற்கும், அறிவிப்பு பலகை, வர்ண சமிக்ஞைகளை தேவையான இடங்களில் பொருத்தவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் விமானநிலையத்தில் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு பயணிகளுக்கு அதிகம் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .