2025 மே 21, புதன்கிழமை

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில், அந்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர் தலையில் காயமும் காணப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பண்டாரிக்குளம் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவாராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .