Editorial / 2020 மே 02 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
67 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த மார்ச் 17 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்து 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர், கடந்த 30 திகதி நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் பீ.சீ.ஆர் பரிசோதனையில், அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago