2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

குப்பைத் தொடர்பில் அறிக்கை கோரும் நிதியமைச்சர்

Editorial   / 2019 ஜூலை 24 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரம், சுற்றாடலுக்கு அச்சுறுத்தலான வகையில்,  இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு கழிவுகள்  கொண்டுவரப்பட்டுள்ளமைத் தொடர்பில், உடனடியாக அறிக்கை ஒன்றை தருமாறு, நிதியமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் பணித்துள்ளார்.

குறித்த கழிவுகள் இலங்கையின் நிறுவனமொன்றினாலேயே, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு கழிவுகள் கொண்டு வரப்பட வேண்டுமெனில் அந்த நாட்டின் சுற்றாடல் அதிகார சபையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவராவது இதனுடன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக, கடும் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .