2024 மே 01, புதன்கிழமை

குறைந்த விலையில் அனுமதிப்பத்திரங்களை வழங்க கோரிக்கை

Simrith   / 2024 ஏப்ரல் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னர் வழங்கப்பட்ட தீர்வையில்லா அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழங்க முடியாவிட்டால், குறைந்த விலையில் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரச அதிகாரிகளிடம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்னையை விரைவில் பாராளுமன்ற குழுவில் கலந்துரையாட, எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் தேர்தல்களின் போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாரிய சவாலை இரு அரசியல் பிரிவைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத் தலைவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர். புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பலரிடம் வாகனங்கள் எதுவும் இல்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு, அவர்கள் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமைகள் காரணமாக, இந்த உரிமங்கள் வழங்குவது ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது, கடைசியாக 2015 இல் வழங்கப்பட்டது. வரியில்லா வாகன உரிமம் கோரி எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்விடயத்தில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X