Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பிரேரணையை முன்வைக்கவுள்ளமை கேலிக்குரிய விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலுக்கு மிகக்குறைவான காலமே உள்ள நிலையில், குற்றப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பேசுவது, நகைச்சுவைக்குரிய விடயமாகும்.
குற்றப் பிரேரணையை கொண்டு வரும் போது, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும்.” என்று ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago