2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் பலி : மனைவி வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை தேயிலைத் தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபரது மனைவியும் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் மரக்கறி தோட்டத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த போதே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி தோட்டத்துக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்றிலிருந்து குளவிக்கூடு கலைந்தமையால் இவ்வாறு தாம் குளவி கொட்டுக்கு இலக்கானதாக, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் 72 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .