2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

’குஷ்’ஷுடன் இந்தியர் கைது

Editorial   / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 2 கோடியே 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' (Kush) ரக போதைப்பொருள் தப்பைக் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் எதனையும் அறிவிப்பதற்கு இல்லாத பாதையான 'பசுமை வழி' (Green Channel) ஊடாக இந்தப் போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே அவர் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஆவார். இவர் இந்தியாவில் மீன் சந்தை ஒன்றில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபடுபவர் எனத் தெரியவந்துள்ளது.

இதுவே இவரது முதலாவது விமானப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்றுள்ளார். பின்னர், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியினுள் இருந்த கார்ட்போர்டு பெட்டியின் பக்கவாட்டுப் பகுதிகளில், இரண்டு பொதிகளாக 2 கிலோ 87 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் ஒட்டப்பட்டு சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபரான அந்தப் பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .