2026 மே 11, திங்கட்கிழமை

’கூட்டமைப்பே கூட்டி செல்கின்றது’

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் காலம் கடந்த வாரத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக கூறியுள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தேர்தலுக்கு எதிரணியினர் தயாராக  உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட பிளவே அதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .