2026 மே 02, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் இன்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார். 

பல்லவராயன் கட்ட சோலை  மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 32 வயதுடைய செல்வரத்தினம் பிரதீபன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின்  கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும், கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். மேலதி விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .