2026 மே 02, சனிக்கிழமை

கேள்வியெழுப்பியது ஐ.தே.க

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற வளாகத்தில், நேற்று (15) ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் கவலை தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இந்தக் கட்டடம் நீதித்துறை அமைப்பின் உச்சப் பாதுகாப்புக்கு மத்தியில் அமைந்துள்ளது என்றும் எனவே, இதில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறத்து வெளிப்படையான விசாரணையை நடத்தவேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பாக, இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர்நீதிமன்றத்தின் வளாகம், கொழும்பில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் ஒரு பிரிவாகும் என்றும் இங்கு நடைபெறும் வழக்குகள் அனைத்தும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள் நிலையில், அங்கு பொதுமக்கள் வருகை தருவதும்  வருகை தருவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்தத் தீ ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை, அரசாங்கம் கண்டறியவேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தின் அடித்தள்தில் மாத்திரமே, தீ விபத்து ஏற்பட்டது என, உயர்நீதிமன்ற பொலிஸ் தெரிவித்திருந்தது என்றும் எனினும், அடித்தளத்தில் அமைந்துள்ள நீதிமன்ற பதிவு அறையின் நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பதிவு அறையில் எந்த சேதமும் ஏற்படவில்லை என, பின்னர் பொலிஸ் தெரிவித்திருந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினு், எதேனும் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக என்பது தொடர்பில் உறுதிப்படுத்த, பதிவு அறையிலுள்ள பதிவுகளின் முழு கணக்கு எடுக்கவேண்டும் என்றும் கட்சி கோரியுள்ளது.

இந்த வளாகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் இதைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டு, புதிய அரசாங்கத்துக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில், அரசாங்க நீதிமன்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றும் இந்த செயன்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றதா அவ்வாறு இல்லையென்றில், அதை தாமதப்படுத்துவதற்கான காரணத்தை அரசாங்கம் கூறவேண்டும் என்றும் ஐ.தே.க கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .