2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கைக்கடிகாரத்தில் ஹெரோயின்

Janu   / 2023 நவம்பர் 27 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைக்கடிகாரத்தில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹஹேன பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்து  சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது சந்தேக நபர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் பின் பகுதியை சோதனையிட்ட  போது அதில் மறைத்து வைத்திருந்தவாரு மூன்று ஹெரோயின் பொதிகளை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் இவ்வாறு நுட்பமான முறையில் போதைப்பொருள் பொதிகளை வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகித்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X