Niroshini / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஸ்ஸில், கைக்குண்டே வெடித்துள்ளதென, அறிவிக்கப்பட்டதுடன், இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்தனர். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
முன்னதாக கருத்துத் தெரிவித்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“சம்பவம் இடம்பெற்ற பகுதியில், இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் முற்றுப்பெறவில்லை. எனினும், கைக்குண்டொன்றே வெடித்துள்ளது” என்றார்.
இதன்போது, கருத்துரைத்த அமைச்சர் சாகல ரத்னாயக்க,
“கைக்குண்டொன்றே, அந்த பஸ்ஸில் வெடித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்றார்.
47 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago