2025 மே 21, புதன்கிழமை

கைதான ’டெய்சி ஆச்சி’க்கு பிணை

Janu   / 2025 மார்ச் 05 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டி 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட், குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக, யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்டை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பண மோசடி சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .