2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கைதி கூண்டில் இருந்த மகனுக்கு ஹெரோய்ன் கொண்டுச் சென்ற தந்தை

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதகம பொலிஸ் நிலையத்தில் கைதி கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மகனுக்கு, உணவுப் பொதியில் மறைத்து கொண்டுச் சென்ற  ஹெரோய்ன் மற்றும் சிகரெட் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.

ஊழல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்  தொடர்படையவர் என தெரிவித்து, பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (17) மாலை மரண வீடொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இன்று (18) பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (17) இரவு தனது மகனுக்கு உணவுப் பொதியை எடுத்துவந்த தந்தை, அதில் 25 கிராம் ஹெரோய்னை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .