Editorial / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் மூவரும் விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2026.04.27 அன்று காலை சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், பொரளை பொலிஸாரினால் மெகசின் சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவரும் இரண்டு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 2026.04.28 ஆகிய புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 2026.05.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொரளை பொலிஸார், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் இணைந்து இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago