Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 27 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள கைதிகளுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மெகசின் ஆகிய சிறைச்சாலைகளிலும் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி நிறைவடையும் பரீட்சைக்காக, நாடு பூராகவும் 4661 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 6,56,641 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதில் 4,22,850 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் 2,33 791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago