2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைதிகள் மீதான தாக்குதல் குறித்த விசாரணை நிறைவு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும், கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணை நிறைவுப்பெற்றுள்ளது.

 அரச நிர்வாக அமைச்சு  மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட, மூவரடங்கிய குழு இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

குறித்த விசாரணை அறிக்கை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைகள் திணைக்களம் இதற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .