2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்குப் பிணை

Nirosh   / 2021 ஜனவரி 09 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரையும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் நீதிமன்று விடுவித்துள்ளது. 

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று(08)  இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று (09) யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை, கலகம் விளைவித்தனர் என்கிறக் இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான்,  மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .