2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொக்கைன் வர்த்தகருக்கு மரணத் தண்டனை தீர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹூவளை  பிரதேசத்தில்  கொக்கைன் போதைப்பொருள்  விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (17) அந்நபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் செயற்பாடுகள் காரணமான, சமூகத்தில் மோசமான நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான் கிஹான் குலதுங்க, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகப்பட்ச தண்டனைகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த மரணத் தண்டனையானது, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் இதன்போது  மேலும் தெரிவித்தார்.

கொஹூவளை பிரதேசத்தைச் சேர்ந்த, நலின் சாருக் குலதுங்க என்பவரே இவ்வாறு  குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, கொஹூவளை பிரதேசத்தில், 62.06 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளை, விற்பனைக்காக தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு எதிராக,  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .